மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் ரூ.26 லட்சம் மொய் வசூல் - ஆர்.டி.ஐ.தகவல்.!!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பக்தர்கள் ரூ.26 லட்சத்தை மொய் பணமாக வழங்கியுள்ளதாக ஆர்.டி.ஐ. மூலம் கோவில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

Share this Video

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த மே 2ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த மீனாட்சி திருக்கல்யாணத்தில் கலந்துகொள்ள தமிழக முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். பின்னர் திருமணம் நடைபெற்ற பின்பு பக்தர்களுக்கு கல்யாண விருந்து மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களிடம் கோவில் நிர்வாகம் சார்பாக மொய் வசூல் செய்யப்பட்டது. இதற்காக கோவில் வளாகத்திற்குள் 6 இடங்களில் மொய் வசூல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாகேந்திரன் ஆர் டி ஐ மூலம் மொய் விருந்தில் கிடைக்கப்பெற்ற வசூல் எவ்வளவு என கேட்டிருந்தார். 

அதற்கு கோவில் நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சுமார் 26 லட்சத்து 80 ஆயிரத்து 350 ரூபாய் மொய் வசூல் மூலம் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Video