Arudra Darisanam: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் அலய ஆருத்ரா தரிசன தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

First Published Dec 26, 2023, 10:03 AM IST | Last Updated Dec 26, 2023, 10:03 AM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயம் உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடைபெரும் ஆருத்ரா தரிசன விழாவை காண இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா தற்போது நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா இன்று தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.