Asianet News TamilAsianet News Tamil

Natarajar Temple: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மார்கழி மாதம் மேற்கொள்ளப்படும் ஆருத்ரா தரிசனம் உலகப் புகழ்பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள பிரம்மாண்டமான உற்சவர் கொடி மரத்தில் உற்சவர் கொடியை உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சதர் ஏற்றி வைத்தார்.

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா இம்மாதம் 26ம் தேதியும், ஆருத்ரா தரிசன விழா 27ம் தேதி நடைபெறுகிறது.

Video Top Stories