திருவிடைமருதூரில் விமரிசையாக நடைபெற்ற சந்திரமௌலீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மேலையூர் ஆனந்தவல்லி அம்பிகை சமேத சந்திரமௌலீஸ்வரர் கோவில் உள்பட நான்கு கோபுரங்களில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.

Share this Video

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உன்னதபுரம் எனும் மேலையூரில் அமைந்துள்ள ஆனந்தவள்ளி அம்பிகை சமேத சந்திரமௌலீஸ்வரர், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ வர சித்தி விநாயகர் உள்ளிட்ட நான்கு கோவில்கள் முற்றிலும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக பெருவிழா கடந்த 9ம் தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கி தொடர்ந்து நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்டவைகளுடன் யாக பூஜைகள் தொடங்கி மங்கள வாத்தியங்களுடன் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் புறப்பட்டு கோயிலில் உள்ள விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 

Related Video