காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் நிர்மலாசீதாராமன் சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம் உபநிஷத் மடம், மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுவாமி தரிசனம் செய்தார்.

Share this Video

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய நீதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகை புரிந்தார்.

காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் அருகே உள்ள உபநிஷத் மடத்திற்கு சென்று அங்கு உள்ள ராம மந்திரம் எந்திரத்தையும், ராமரிடம் பணிவாக உபதேசம் கேட்கும் ஆஞ்சநேரையும் தரிசனம் செய்து வழங்கினார்.

பின்னர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு பெருந்தேவி தாயாரையும், அத்திகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாளையும் வணங்கி வழிபட்டார். மேலும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Related Video