சிவ கோஷம் வின்னை முட்ட மாட வீதிகளை வளம் வந்த ஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் ஆலய தேர்

பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்த ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் ஞானப்பிரசன்னாம்பிகை தாயார்.

Share this Video

தென் கைலாயம் எனவும், ராகு - கேது பரிகார ஸ்தலமாவும் ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சிவராத்திரியை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தின் 8வது நாளான இன்று காலை ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் ஞானப்பிரசன்னாம்பிகை தாயார் தேரில் எழுந்தருளினர். பக்தர்கள் சிவ சிவ என்ற கோஷத்துடன் நான்கு மாட வீதியில் வடம் பிடித்து இழுக்க சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இரவு நாராதர் புஷ்கரனியில் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான நாளை காலை அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்திஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானபிரசுண்ணாம்பிகை தாயார் எழுந்தருள் அருள் பாலிக்க உள்ளனர்.

Related Video