வீட்டில் செல்வம் பெருக வேண்டும்; ரூபாய் நோட்டுகளால் அலங்கறிக்கப்பட்ட அம்மனை வழிபட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்

திருச்சியில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

First Published Jan 6, 2024, 3:16 PM IST | Last Updated Jan 6, 2024, 3:16 PM IST

பிரசித்தி பெற்ற மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் "தனலட்சுமி " அலங்காரம் பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் திரளான பக்தர்கள் ஒம் சக்தி பராசக்தி பக்தி பக்தி முழங்க தரிசனம் செய்தனர்.
  
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில்  ஒவ்வொரு ஆண்டும் பகவதி அம்மனுக்கு திருவிழா நடைபெறும். அதன்படி இந்தாண்டு பகவதி அம்மன் திருவிழாவானது டிச.28ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று ரூ.10, 20, 50, 100, 200, 500 நோட்டுகளால் தோரணம் அமைத்து பல லட்ச ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து அலங்கார மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. தனலட்சுமி அலங்காரம் பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.