Asianet News TamilAsianet News Tamil

Ayodhya Ram Temple: அயோத்தி சரயு நதிக்கரையில் ராமாயண நடனம்; ஏசியாநெட் சிறப்பு வீடியோ!!

அயோத்தியில் அமைதியான சரயு நதிக் கரையில், காலத்தால் அழியாத ராமாயணக் கதையை சித்தரிக்கும் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி நிரந்தர ஈர்ப்பாக மாறியுள்ளது. ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் எடிட்டர் அஜித் ஹனமக்கனவர் ராமாயண நடனத்தை நமக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார். 

அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஆன்மிகம் மற்றும் பக்தி பின்னணியில் ஒரு சூழலை உருவாக்கியதால், துல்லியமாக நிறுவப்பட்ட ப்ரொஜெக்டரில் ஒளியும், ஒலியும் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலிக்கிறது. ராமாயண கதை நடனம் மூலம் பிரதிபலிப்பது பக்தர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது. 

இத்துடன், அயோத்தியில் ஏற்பட்ட மாற்றங்களை ஏசியாநெட் நியூஸ் படம் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் வெறும் 10 அடி சாலையாக இருந்த சாலைகள் தற்போது 80 அடி அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. விரைவான நகர்ப்புற பரிணாம வளர்ச்சியை அயோத்தி விளக்குகிறது.

அயோத்தி நகரின் கட்டிடக்கலையை ராமாயண இதிகாச வரலாறு பிரதிபலிக்கிறது. அயோத்தியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை உலகமே எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

அயோத்தியில் சரயு நதிக்கரையில் ராமருக்கு பக்தர்கள் ஆரத்தி - ஏசியாநெட் சிறப்பு வீடியோ!!

Video Top Stories