ஆவணி அவிட்டம்; புதுவையில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பூணூல் மாற்றம்

புதுச்சேரி ஆவணி அவிட்டத்தையொட்டி குரு சித்தானந்தா கோவிலில் நடைபெற்ற பூணூல் மாற்றும் வைபவத்தில் 600-க்கும் மேற்பட்ட பிராமணர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு பூணூல் மாற்றிக்கொண்டனர்.

Share this Video

ஆவணி மாதத்தில் வரும் அவிட்ட நட்சத்திர தினத்தன்று பிராமணர்கள் பூணூல் மாற்றும் வைபவத்தில் பங்கேற்று பூணூல் மாற்றிக்கொள்வார்கள். அந்த வகையில் புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் அமைந்துள்ள குரு சிந்தானந்தா சுவாமி ஆலயத்தில் பிரம்மஸ்ரீ, வேதசாம்ராட் ராஜா சாஸ்திரிகள் தலைமையில் வேதபாடசாலை வித்யார்த்திகள் வேதமந்திரம் முழங்க நடைபெற்ற பூனூல் மாற்றும் வைபவத்தில் 600-க்கும் மேற்பட்ட பிராமணர்கள் உள்ளிட்ட ஏராமானோர் பூனூல் மாற்றிக்கொண்டனர்.

காலை 5 மணி முதல் 12 மணிவரை நடைபெற்ற பூணூால் மாற்றும் வைபத்தை தொடர்ந்து நாளை காலை 5 மணிக்கு உலக நன்மை வேண்டி சஷ்டி காயத்ரிஜெப ஹோமம் நடைபெற உள்ளது.

Related Video