Asianet News TamilAsianet News Tamil

Watch : திருப்பதியில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம்! - முத்து கவச அலங்காரத்தில் வெங்கடாஜலபதி!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறது. இதில் முத்து கவச அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதில்  2-வது நாளான இன்று கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் கல்யாண உற்சவ மண்டபத்தில் கோயில் அர்ச்சகர்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை உற்சவ மூர்த்திகளுக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு கோயில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஜேஷ்டாபிஷேகத்தின் 3-வதுநாளான இன்று உற்சவ மூர்த்திகளுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது.

கருட சேவை ரத்து

வருடாந்திர ஜேஷ்டாபிஷகம் நடைபெற்று வருவதால் பவுர்ணமியையொட்டி இன்று மாலை நடைபெற வேண்டிய கருட சேவை தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Video Top Stories