15 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்க கவசத்துடன் சிம்மவாகனத்தில் எழுந்தருளிய சமயபுரத்தாள்!

திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு 15ஆண்டுகளுக்கு பின்னர் தங்க கவசம் உடைய அணிந்து சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

Share this Video

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், அம்மன் கோவில்களில் முதன்மையானதும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். மேலும் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு செல்வார்கள்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மன் ஏக தின லட்சார்சனை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கவும், நோய் நொடிகள் இல்லாமல் மக்கள் வாழவும், ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கவும், அனைவருக்கும் சகல சௌபாக்கியம் கிடைக்க வேண்டிய 15ஆண்டுகளுக்கு பின்னர் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையொட்டி சமயபுரம் மாரியம்மன் உற்சவர் அம்மன் தங்க கவசம் உடைய அணிந்து சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் கொடிமரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.

Related Video