Asianet News TamilAsianet News Tamil

ரூ.2.50 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுகளை கொண்டு கைலாசநாதர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரம்

சத்துவாச்சாரியில் ஸ்ரீ பர்வதவர்த்தினி கைலாசநாதர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு ரூ. 2.50 லட்சம் ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அருள் மிகு ஸ்ரீ பர்வதவர்த்தினி ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. நவராத்திரி 6 ஆம் நாளான நேற்று ஸ்ரீதனலட்சுமிக்கு ரூ.2.50 லட்சம் ரூபாய் நோட்டுகளான ரூ.500, 200, 100, 50, 20 ஆகிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதே போன்று வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி 6 ஆம் நாளை முன்னிட்டு அம்மன் சையன கோலத்தில் சிறப்பு அலங்காரங்களை செய்து குங்கும லட்ச்சார்ச்சணைகளும் நடந்தது. ஆன்மிக பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Video Top Stories