Asianet News TamilAsianet News Tamil

பழனி அருகே இன்று ஒரே நாளில் 6 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் கோவிலில் இன்று ஒரே நாளில் 6000 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சி உள்ளது. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற மண்டு காளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. 15 நாட்கள் சாட்டுடன் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் முக்கிய நிகழ்வான  நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் சண்முக நதியில் இருந்து மண்டு காளியம்மன் கோவில் வரை மூன்று கிலோமீட்டர் தூரம் அலகு குத்தியும், தீர்த்த குடங்களுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மண்டு காளியம்மன் கோவில் திருவிழா துவங்கியதில் இன்று ஒரே நாளில் கோவில் நிர்வாகமே ஆச்சரியப்படக்கூடிய வகையில் 6 ஆயிரம் பக்தர்கள் ஒரே நாளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக பழனி தாலுகா காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

பக்தர்கள் 31வது ஆண்டாக கோவில் திருவிழா நடைபெறுவதால் மிகவும் பக்தி பரவசத்துடன் பூக்குழியில் இறங்கி வருகின்றனர். நாளை மறுநாள் 1008 குத்து விளக்கு பூஜைகளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Video Top Stories