90 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 5000 லிட்டர் பால் அபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

டி 90 அடி உயர பிரம்மாண்டமான விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் டேங்கர் லாரி மூலம் 5 ஆயிரம் லிட்டர் பால் கொண்டு வரப்பட்டு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

First Published Apr 14, 2024, 2:45 PM IST | Last Updated Apr 14, 2024, 2:45 PM IST

விழுப்புரத்தில் உள்ள 90 அடி உயர பிரம்மாண்டமான விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 5 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி, விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள 90 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு பால் அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

இதனையொட்டி 90 அடி உயர பிரம்மாண்டமான விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் டேங்கர் லாரி மூலம் 5 ஆயிரம் லிட்டர் பால் கொண்டு வரப்பட்டு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Video Top Stories