20 டன் எடையில் கோவில் விமானம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ராட்சத கிரேன் மூலம் வைக்கப்பட்டது

திருப்பூர் செட்டிபாளையம்  மாகாளியம்மன் கோவிலில் 22 அடி உயர கோபுரத்தின் மீது 20 டன் எடை உள்ள கருவறை விமானம் 165 அடி உயரம் கொண்ட  ராட்சத கிரேன் மூலம் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டது.

First Published Aug 4, 2023, 6:15 PM IST | Last Updated Aug 4, 2023, 6:15 PM IST

திருப்பூர் வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட  செட்டிபாளையம் பகுதியில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த  அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன்  கோவில் உள்ளது. இந்த கோவிலை புணர்மைத்து புதுப்பிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் கோவிலின் 22அடி உயரம் கோபுரம் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து 3-வது நிலை மேல்பகுதியில் கருவறை கோபுரத்தின் விமானம்  ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 20 டன் எடை கொண்ட அழகான வேலைப்பாட்டுடன் கூடிய கருவறை விமானம் பூஜைகள் செய்யப்பட்டு ராட்சத கிரேன் மூலம் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டது.

இந்த கோவிலின்  நிகழ்வை கருவறை விமானம் 165 அடி உயரம் கொண்ட  ராட்சத கிரேன் மூலம் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டதை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

Video Top Stories