சோமவாரத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

சாத்தூர் இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவிலில் கார்த்திகை மாத சோமவார சிறப்பு நிகழ்ச்சியாக 1008 சங்காபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

Share this Video

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம், சிறப்பு ஆராதணை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், திருமஞ்சன பொடி, விபூதி உள்ளிட்ட 18 வகையான திவ்ய பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

Related Video