
பன்றிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு; திண்டுக்கல்லில் விநோத வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பன்றிகளை தரையில் கால் படாமல் ஊர்வலம் அழைத்து சென்று நடத்தப்பட்ட வினோத வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செல்லம்புதூர் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் மகா சிவராத்திரி விழா வருடம் தோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு வடுகபட்டி, சிலமலை கோவில், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து சந்தனகருப்பு கோவிலில் பூஜை செய்து பின்னர் ஊர்வலமாக பட்டத்தரசி அம்மன் கோவில் சென்றனர்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
அங்குள்ள கோவிலில் பூஜை செய்வதற்காக நேர்த்திக்கடன் மேற்கொண்டவர்கள் பன்றி குட்டிகளை அழைத்து வந்து அதன் கால்கள் தரையில் படாதவாறு பாதைகளில் சேலைகளை விரித்து அதன் மீது பன்றிகளை நடக்க வைத்தனர். மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்று கோவிலில் விருக பூஜை செய்து தங்கள் நேர்த்தி கடனை நிவர்த்தி செய்தனர்.