Weapon Review : சத்யராஜ் நடித்த வெப்பன் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வஸந்த் ரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் வெப்பன் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Ganesh A | Updated : Jun 07 2024, 12:59 PM
Share this Video

சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘வெப்பன்’. இப்படத்தில் சத்யராஜுடன் வசந்த் ரவி, ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தான்யா ஹோப், யாஷிகா ஆனந்த், கனிஹா, மைம் கோபி, கஜராஜ், பரத்வாஜ் ரங்கன், சையது சுபன், வேலுபிரபாகரன், ஷியாஸ் கரேம், மாயா கிருஷ்ணன், பெனிட்டோ பிராங்க்ளின், வினோதினி வைத்தியநாதன், ரகு எசக்கி, மேக்னா சுமேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

‘வெப்பன்’ திரைப்படம் அறிவியல் புனைக்கதை ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை குகன் சென்னியப்பன் எழுதி இயக்கியுள்ளார். மில்லியன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் பார்த்த ரசிகர்கள் நமக்கு பிரத்யேகமாக அளித்த விமர்சனத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Related Video