Video: 'வேட்டையன்' படத்தில் மாஸ் காட்டினாரா தலைவர்? - ரசிகர்களின் கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'வேட்டையன்' திரைப்படம் எப்படி இருக்கு என்பதன் ரசிகர்களின் கருத்து இதோ

Share this Video

இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில், அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஜினிகாந்துக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தலைவரின் 'வேட்டையன்' படம் எப்படி இருக்கிறது என... ரசிகர்கள் ஏசியா நெட் நிருபர்களிடம் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட வீடியோ தொகுப்பு இதோ.

Related Video