Asianet News TamilAsianet News Tamil

சந்திரமுகியாக ஜோதிகாவை பீட் செய்தாரா கங்கனா? வெளியானது 'ஸ்வகத்தாஞ்சலி' முதல் சிங்கிள் லிரிக்கல் பாடல்!

சந்திரமுகி 2 படத்தில் இருந்து, கங்கனா ரணாவத் நாட்டியம் ஆடியுள்ள, ஸ்வகத்தாஞ்சலி முதல் சிங்கிள் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
 

First Published Aug 11, 2023, 6:12 PM IST | Last Updated Aug 11, 2023, 6:12 PM IST

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சந்திரமுகி 2 படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது சந்திரமுகி 2. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அவ்வப்போது இப்படத்தின் பிரமோஷன் பணியிலும் படகுழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

முதல் பாகத்தில் ரஜினிகாந்த் ஏற்று நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த படத்திற்கு, ஆஸ்கர் நாயகன் கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரமுகி 2 படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு, ராதிகா, சரத்குமார், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில், சுபாஸ்கரன் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளார். தற்போது இந்த படத்தில் கங்கனா ரணாவத்தின் நாட்டிய பாடலான ஸ்வகத்தாஞ்சலி என்கிற முதல் சிங்கள் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பலரும் கங்கனாவை ஜோதிகாவுடன் ஒப்பிட்டு கமெண்ட் போட்டு வந்தாலும், கங்கனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கூறி வருகிறார்கள்.

Video Top Stories