சந்திரயான் 3 வெற்றியை 45 அடி ஆழ கடலுக்கடியில் கொண்டாடிய நீச்சல் வீரர்கள்

சந்திரயான் 3 விண்களம் வெற்றிபெற்றதைக் கொண்டாடும் விதமாக புதுவையில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கடலுக்கடியில் சந்திரயான் 3 மாதிரியை கடலுக்கடியில் கொண்டு சென்று விஞ்ஞானிகளுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Share this Video

புதுச்சேரியைச் சேர்ந்த டெம்பிள் அட்வென்ஞ்சர் ஸ்கூபா ஆழ் கடல் நீச்சல் பயிற்சி பள்ளியை நடத்தி வருபவர் அரவிந்தன். இவர் மற்றும் இவரது குழுவினர் ஆழ் கடலில் சென்று கடந்த 17 ஆண்டுகளாக பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி வருகின்றனர். உதாரணமாக கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது, ஒலிம்பிக்க போட்டியில் இந்தியாவின் வெல்வது உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் சாதனைகள் படைப்பது போன்ற பல்வேறு நிகழ்வுகளை மையப்படுத்தி ஆழ் கடல் சென்று அவர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நிலவில் இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்தன், தருண் ஸ்ரீ தலைமையில் நீச்சல் வீரர்கள் தாரகை ஆராதனா, ஜான், நிஷ்விக், கீர்த்தனா ஆகியோர் நேற்று 45 அடி ஆழ்கடலுக்கு சென்று 10 கிலோ எடையுள்ள சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் மாதிரியை எடுத்துச்சென்று ஆழ்கடலில் நிலை நிறுத்தி தேசிய கொடியை ஏந்தி அனைத்து ஆழ்கடல் வீரர்களும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேரம் ஆழ்கடலில் தேசிய கீதம் ஒலிக்கச்செய்து சந்திரயான்-3 மாதிரியுடன் வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Video