நான் சார்ந்துள்ள சமுதாயத்தை பின்னணியாக வைத்து படம் எடுக்கிறேன் - பகாசூரன் பட இயக்குனர் மோகன் ஜி பேட்டி!

பெண்களின் விழிப்புணர்வுக்காகவே படம் எடுப்பதாக குறிப்பிடும் இயக்குனர் மோகன் ஜி, எந்த சமுதாயத்திற்காகவும் படம் எடுக்கவில்லை அதே சமயத்தில் தான் சார்ந்துள்ள சமுதாயத்தை பின்னணியாக வைத்து படம் எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
 

Share this Video

ருத்ர தாண்டவம், திரௌபதி, படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி-யின் 3-வது படமான செல்வராகவன் மற்றும் நட்டி என்கிற நடராஜன் நடித்த பகாசூரன் திரைப்படம் நேற்று நாடு முழுவதும் வெளியானது தமிழக மற்றும் புதுச்சேரியில் 300 திரையரங்களுக்கு மேல் பகாசுரன் திரைப்படம் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி ஜீவா ருக்மணி தியேட்டரில் வெளியாகி உள்ள பகாசூரன் திரைப்படம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் இயக்குனரான மோகன் ஜி திரையரங்கத்திற்கு நேரடியாக வந்து படம் பார்த்து வெளியே வந்தவர்களிடம் படத்தைப் பற்றி கருத்து கேட்டு தெரிந்து கொண்டார்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் படம் குடும்ப பங்கான படமாக இருக்கிறது மிகவும் நன்றாக இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் திரையரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய பகாசூரன் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி, கொரோனா காலகட்டத்தில் பெண்களின் வறுமை நிலையை பயன்படுத்தி அவர்களை ஆன்லைன் பாலியல் தொழிலுக்கு சிலர் கொண்டு சென்றனர், அது மட்டுமல்லாமல் மொபைல் போனில் இருக்கும் ஆப்புகளை பயன்படுத்தி இது போன்ற செயலில் ஈடுபட்டால் குடும்பத்தில் அது எந்த மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்ற ஆழமான கருத்தை மையமாக வைத்தும், ஒரு மொபைல் போனில் எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ அந்த அளவுக்கு அதில் கெடுதலும் இருக்கிறது. மேலும் தமது பிள்ளைகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதனை மையமாக வைத்து பகாசூரன் படம் எடுக்கப்பட்டது என்றார்.

Related Video