எங்களையும் கொஞ்சம் கவனிச்சிட்டு போங்க; சுற்றுலா வந்த வேனில் சென்று அட்டகாசம் செய்த குரங்கு

புதுச்சேரியில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்ற போது காந்தளூர் செக்போஸ்ட்டில் குரங்கு வாகனத்தில் உள்ளே ஏரி அட்டகாசம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Video

புதுச்சேரியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டெம்போ டிராவலர் வாகனத்தின் மூலம் கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். அப்பொழுது மூணாறு செல்லும் வழியில் காந்தளூர் என்ற செக்போஸ்டில் வண்டியை நிறுத்திவிட்டு வாகனத்தை செக் போஸ்டில் பதிவு செய்வதற்காக இறங்கி சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் குரங்கு ஒன்று வண்டிக்குள் ஏரி அட்டகாசம் செய்தது. இதனால் வாகனத்தில் உள்ளே இருந்த இளைஞர்கள் அச்சத்துடன் இருந்தனர். குரங்கு வாகனத்தின் உள்ளே அட்டகாசம் செய்வதை வாகனத்தின் உள்ளே இருந்த இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Video