Asianet News TamilAsianet News Tamil

புதுவையில் நடராஜர் சிலை மீது நின்றுகொண்டு படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு

புதுச்சேரியில் நடராஜர் சிலை மீது அமர்ந்துகொண்டு நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அமைந்துள்ளது பாரதியார் பல்கலைக்கூடம். இந்த பல்கலைக் கூடத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு இசை, ஓவியம், நடனம், சிற்பக்கலை உள்ளிட்ட படிப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது,

மேலும் இந்த பல்கலைக்கூட வளாகத்தில் பல்வேறு மரங்கள் கொண்டு அடர்ந்த பகுதியாக காணப்படும். இந்த நிலையில் சிற்ப துறையில் பயிலும் மாணவர்கள் பயன்பாடற்ற காகிதம் இரும்பு பொருட்கள் மணல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிற்பங்களாக செய்து அசத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிற்பக்கலை படிக்கும் மாணவர்கள் பயனற்ற இரும்பு, நட்டு, போல்ட் போன்றவற்றை கொண்டு சுமார் 7 அடி உயரத்தில் ஒரு நடராஜர் சிலையை உருவாக்கி இருந்தனர்.

கலைநயத்தோடு மாணவர்கள் உருவாக்கிய இந்த சிலையை பலர் ரசித்து சென்றனர். இந்த நிலையில் நடராஜர் சிலையின் தலைமீது 7 அடி நீளமுள்ள  நல்ல பாம்பு அமர்ந்து இருந்தது. இதனை ஊழியர்கள் கண்டதும் நாக பாம்பு படம்  எடுத்து ஆடியது. இதனை  அனைவரும்  வியப்புடன் பார்த்தனர். பின்னர் ஊழியர் ஒருவர் லாவகமாக பாம்பை மீட்டு மரங்கள் அடர்ந்த தோட்டப்பகுதியில் விட்டனர். மாணவர்கள் உருவாக்கிய நடராஜர் சிலை மீது திடீரென்று ஏழடி நீளம் உள்ள நல்ல பாம்பு படம் எடுத்து ஆடிய சம்பவம் பாரதியார் பல்கலை கூடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Video Top Stories