மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்த வாலிபர்

மேற்குவங்க மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இளைஞர் ஒருவர் வாக்குப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடும் காட்சி வைரலாகி வருகிறது.

Share this Video

மேற்குவங்க மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குபதிவு இன்று துவங்குவதற்கு முன்பு இருந்தே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்து வருகிறது. மொத்தமாக இந்த மாநிலத்தில் இதுவரை வன்முறைக்கு 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல இடங்களில் வாக்குப் பெட்டிகளை சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இளைஞர் ஒருவர் வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video