அவங்க கால்ல விழுந்தாச்சு கூட்டிட்டு வாங்க; சேர்லாம் காலியா இருக்கு - கூவி கூவி ஆள் சேர்த்த பாஜகவினர்

விழுப்புரத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கட்சி நிர்வாகி ஒருவர் தொண்டர்களை கூட்டத்திற்கு அழைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Oct 28, 2023, 8:15 PM IST | Last Updated Oct 28, 2023, 8:15 PM IST

விழுப்புரத்தில் இன்று பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொண்டர்கள் அமர்வதற்காக நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் பெரும்பாலான நாற்காலிகள் காலியாக இருந்தன. அதனை செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்த நிலையில் அதனை பார்த்த பாஜக நிர்வாகி மேடையில் நின்று கொண்டு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனாலும் கூட்டம் சேராத நிலையில் ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும் தொண்டர்களின் காலில் விழுந்தாவது நாற்காலியில் அமருமாரு அழைப்பு விடுத்தார். இதனால் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்களிடையே சிரிப்பலை எழுந்தது.

Video Top Stories