நான் பிளான் பண்ணி இறங்கினால் நாம் தமிழர் கட்சி காலியாகி விடும் - வீரலட்சுமி

எனக்கு இன்னொரு அவதாரம் இருக்கு, அதை எடுத்தால் சீமானால் கட்சி நடத்த முடியாது என்று வீரலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

First Published Sep 14, 2023, 7:17 PM IST | Last Updated Sep 14, 2023, 7:17 PM IST

நாம் தமிழர் கட்சியினர் தனக்கு தொடர்ந்து தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல், ஆபாச கருத்துகளை அனுப்பி மிரட்டுவதாகக் கூறி நாம் தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் நிறுவனர், தலைவர் வீரலட்மி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, என்னைப்பற்றி சீமானுக்கு நன்றாக தெரியும். தற்போது உள்ள ஒருசிலருக்கு என்னை பற்றி தெரியாமல் எனக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அவர்களை சீமான் கட்டுப்படுத்த வேண்டும். எனக்கு இன்னொரு அவதாரம் உள்ளது. அதனை நான் எடுத்தால் சீமானால் கட்சி நடத்த முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Video Top Stories