இராமர் கோவில் நிகழ்ச்சிகளை நேரலை செய்வதை தடுத்து நிறுத்தியது திமுகவின் சிறுபிள்ளைத்தனம் - தினகரன் விமர்சனம்

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது அதனை தமிழகத்தில் நேரலை செய்ய முயன்றதை தடுத்தது திமுகவின் சிறுபிள்ளைத்தனம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

Share this Video

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமமுக மண்டல நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக மற்றும் பழனிச்சாமி தலைமையில் உருவாகும் எந்த கட்சியுடனும் தாங்கள் கூட்டணி வைக்கப் போவதில்லை. அதேபோன்று அயோத்தி நிகழ்வினை எல் இ டி திரையில் ஒளிபரப்ப காவல்துறையினரை வைத்து தடுத்து நிறுத்திய திமுகவின் செயல் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

Related Video