Asianet News TamilAsianet News Tamil

இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பின்பு அண்ணாமலையின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற்றப்படும் - அமைச்சர் அதிரடி

இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பின்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.

First Published Nov 7, 2023, 1:09 PM IST | Last Updated Nov 7, 2023, 1:09 PM IST

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பின்பு பாஜக தலைவர் அண்ணாமலையின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும். எனது ஊழல் வழக்கு குறித்து அண்ணாமலை பேசுகிறார். எனது வழக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம். ஆளுநர் மாளிகைக்குள் கருக்கா வினோத் வெடிகுண்டு வீசவில்லை. ஆளுநர் மாளிகை போகும் வழியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது பாஜகவினர். மீண்டும் அவர்களே தற்போதும் ஜாமினில் எடுத்து பெருமையை தேடிக் கொள்ளலாம். நீட்டைப் பற்றி பேசுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு, அதன் அடிப்படையில் தான் கருக்கா வினோத்தும் பேசியுள்ளார், அண்ணாமலை வேண்டுமானால் எங்களோடு சேர்ந்து நீட்டு விலக்குக்கு ஆதரவு கொடுக்கட்டும்.

ஆளுநர் மீதான வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் எவ்வாறு வாதிடுவது என்று தலைமை வழக்கறிஞரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அவ்வாறு வாதாடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.