உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரும் தேர்தலுக்கான வெற்றித் திலகம்! - அதிமுக தொண்டர்கள் கருத்து!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

Share this Video

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினமே ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையிட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடருகிறார். 

இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அதிமுக கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பு வரும் தேர்தல்களுக்கான வெற்றித்திலகம் என குறிப்பிட்டுள்ளனர். இனி எங்களுக்கு அனைத்திலும் வெற்றி என்றும் தெரிவித்துள்ளனர். 

Related Video