வீரலட்சுமிய தெரியாதா? பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தமிழர் முன்னேற்றபடை தலைவர் சாட்டையடி பதில்

ஆங்கிலேயர் காலத்தில் சாதியை எதிர்த்து போராடிய வீரலட்சுமியை தான் எனக்கு தெரியும், வேறு யாரையும் தெரியாது என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வீரலட்சுமி பதில் அளித்துள்ளார்.

Share this Video

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் உங்கள், மீது தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி ஆயிரம் கோடி ஊழல் புகாரை முன்வைத்துள்ளாரே என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அண்ணாமலை கூறுகையில், எனக்கு வீரலட்சுமியை தெரியாது. எனக்கு தெரிந்த ஒரே வீரலட்சுமி ஆங்கிலேயர் காலத்தில் சாதியை எதிர்த்து போரிட்ட வீரலட்சுமியை தான் எனக்கு தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி கூறுகையில், கோவில்பட்டி வீரலட்சுமி வாழ்ந்த காலம் 1961 முதல் 1990 வரை மட்டும் தான். அது ஆங்கிலேயர் காலம் கிடையாது. இந்த வரலாறு கூட தெரியாமல் நீங்கள் எப்படி ஐபிஎஸ் அதிகாரியானீர்கள் என்று அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் ஆயிரம் கோடி ஊழல் என்றதும் ஏன் பதற்றம் வருகிறது. இனிவரும் காலத்தில் வீரலட்சுமியின் செயல்பாட்டால் அண்ணாமலை தொடர்ந்து உளறிக் கொண்டு தான் இருப்பார் என பதில் அளித்துள்ளார்.

Related Video