தமிழக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த ராகுல் காந்தி.. விரைவில் காங்கிரசில் மாற்றமா?

டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார் ராகுல் காந்தி.
 

First Published Aug 4, 2023, 10:44 PM IST | Last Updated Aug 4, 2023, 10:44 PM IST

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிகளை பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் தொடங்கி விட்டன. எதிர்க்கட்சிகளை வீழ்த்த காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. 

தமிழக காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகளுக்கு மேல் கே.எஸ்.அழகிரி தொடர்கிறார். அண்மைக்காலங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர் மாற்றப்பட்ட நிலையில், அழகிரி இன்னும் மாற்றப்படவில்லை. இதனால் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார் ராகுல் காந்தி.

டெல்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில முன்னாள் தலைவர்கள், 8 எம்.பி.க்கள், 18 எம்எல்ஏ-க்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

Video Top Stories