எங்கள் கூட்டணியின் மிகச்சிறந்த விளம்பரதாரர் பிரதமர் மோடி தான் - மும்பையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் எங்கள் கூட்டணி குறித்து மட்டுமே பேசும் பிரதமர் மோடியே எங்கள் கூட்டணியின் மிகச்சிறந்த விளம்பரதாரர் என்று மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

First Published Sep 1, 2023, 5:44 PM IST | Last Updated Sep 1, 2023, 5:44 PM IST

மத்திய பாஜக அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் 3வது கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கு மத்தியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அரசியல் காரணங்களுக்காக நாங்கள் ஒன்றுசேரவில்லை. பாஜகவின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவே இந்த கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாஜக அரசு செய்த சாதனைகள் குறித்து கூறுவதற்கு ஒன்றுகூட இல்லாததால் எங்கு சென்றாலும் பிரதமர் எங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார். கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி எங்களைப் பற்றி மட்டுமே பேசிவரும் பிரதமர் மோடி தான் எங்கள் கூட்டணியின் மிகச்சிறந்த விளம்பரதாரர்.

I.N.D.I.A கூட்டணியின் பலத்தைவிட, ‘இந்தியா’ என்ற பெயரே பாஜக கட்சிக்குப் பயத்தை உண்டாக்கியுள்ளது. அதனால்தான், நம் கூட்டணியைக் கொச்சைப்படுத்திப் பேசுவதையே பாஜகவினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பாஜக ஆட்சியை வீழ்த்தி மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் அரசை ஒன்றியத்தில் அமைப்பதே I.N.D.I.A கூட்டணியின் நோக்கம். இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு, நிச்சயமாக பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Video Top Stories