Asianet News TamilAsianet News Tamil

சமாதி கட்ட பணம் இருக்கு, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? சீமான் ஆவேசம்

தலைவர்களுக்கு நினைவிடம் கட்டவும், பேனா உள்ளிட்ட நினைவுச் சின்னம் அமைக்கவும் பணம் இருக்கும் போது சம வேலைக்கு சம ஊதியம் கேட்கும் ஆசிரியர்களுக்கு வழங்க பணம் இல்லையா என சீமான் கேள்வி.

First Published Oct 5, 2023, 2:43 PM IST | Last Updated Oct 5, 2023, 2:43 PM IST

சென்னையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்ககளை வலியுறுத்தி போரட்டம் நடத்திவரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீங்கள் தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதியை தான் ஆசிரியர்கள் நிறைவேற்றம் செய்யக்கோரி போராடுகிறார்கள்.

சமவேலைக்கு சம ஊதியம் என்பது நீங்கள் கொடுத்த வாக்குறுதி, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக தெரிவித்திருந்தீர்கள். ஆனால் தற்போது தலைவர்களுக்கு நினைவிடம் அமைக்கவும், நினைவுச் சின்னம் அமைக்கவும் பணம் இருக்கும் போது ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற பணம் இல்லை என்று சொல்வது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

Video Top Stories