34 ஆண்டுகளுக்கு பின் சட்டமன்றத்திற்கு வந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று முதல் முறையாக சட்டமன்றத்திற்கு வருகை தந்தார்.

Share this Video

அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றிருந்தார். 

YouTube video player

இருப்பினும் கெரோனா நோய் தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். சிகிச்சை முடிந்து அண்மையில் வீடு திரும்பிய நிலையில், நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல் முறையாக அவர் இன்று பங்கேற்றார்.

Related Video