Asianet News TamilAsianet News Tamil

கடும் எச்சரிக்கை விட்ட அமைச்சர்.. ஆதாரத்துடன் சவால் விடும் எம் பி..!பரபரப்பு வீடியோ

நாமக்கல் சட்டக்கல்லூரி திறப்பு விழா கருத்து மோதல் எதிரொலியாக மணல் கடத்திய 4  லாரிகளை தடுத்து  நிறுத்தி திமுக MP சின்ராஜ் பேசுகையில்..

நாமக்கல் மாவட்டம் திமுக MP சின்ராஜ், தொடர்ந்து மணல் கடத்தும் லாரிகளை பிடித்து வழக்கு பதிவு  செய்து வருகிறார். இந்நிலையில், அரசு சார்பில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நடைபெற்றது. இதில் மின்சார துரை அமைச்சர் தங்கமணி பங்கேற்றார். அப்போது திமுக MP சின்ராஜ்  லாரிகளை பிடித்து வழக்கு பதிவு செய்வது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார்..  "

எம்.பி சின்ராஜ்  அவருடைய ஆட்களுடன் சென்று போலீஸாருடன் வாக்குவாதம் செய்வது சட்டவிரோதமானது என்றும், அத்துமீறினால் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் கூறினார். 

 தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் எந்தச் சட்ட விரோத சம்பவமும் நடைபெறவில்லை. அப்படித் தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையத்தில் உள்ள லாரி ஓட்டுனரிடம் விசாரணை செய்யப் போகிறேன் என்று தெரிவித்தார்

இதனை அடுத்து நாமக்கல் சட்டக்கல்லூரி திறப்பு விழா கருத்து மோதல் எதிரொலியாக மணல் கடத்திய 4  லாரிகளை தடுத்து  நிறுத்தி திமுக MP சின்ராஜ், அமைச்சர் தங்கமணி இப்போது என்ன சொல்ல போகிறார்  பார்ப்போம் என்று  கூறினார்

Video Top Stories