மாமனிதன் வைகோ ஆவணப் படம் அனைத்து தரப்புகளின் வரவேற்பை பெற்றுள்ளது: துரை வைகோ
'மாமனிதன் வைகோ' ஆவணப் படம் அனைத்து தரப்புகளின் வரவேற்பை பெற்றுள்ளதாக மதுரையில் துரை வைகோ தெரிவித்தார்.
மதிமுக சார்பில் வெளியிடப்பட்ட "மாமனிதன் வைகோ" எனும் ஆவணப் படம் மதுரையில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த ஆவணப் படத்தை மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேரில் பார்வையிட்டார். மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள மதிமுகவினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் ஆவணப் படத்தை பார்வையிட்டனர்.
மேலும் படிக்க:துணை பொதுச்செயலாளர் பதவி யாருக்கு..? புதுக்கோட்டை விஜயாவிற்கு வாய்ப்பா..? ஓரங்கட்டப்படுகிறாரா கனிமொழி...?
பின்னர் செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறுகையில் "வைகோவின் 56 ஆண்டு பொது வாழ்க்கை குறித்து ஆவணப் படம் எடுக்கப்பட்டது, வைகோ குறித்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், தலைவர் மற்றும் தொண்டர்கள் உழைப்பை எடுத்து காட்டும் விதமாக ஆவணப் படம் எடுக்கப்பட்டது, மாமனிதன் வைகோ ஆவணப் படம் இளைஞர்களுக்கு எடுத்து காட்டாக விளங்குகிறது, மாமனிதன் வைகோ ஆவணப் படம் அனைத்து தரப்புகளின் வரவேற்பை பெற்றுள்ளது"என்றார்.
மேலும் படிக்க:ஆ.ராசா கண்டிக்கவில்லை என்றால் திமுக அதற்குரிய தண்டனையைப் பெறும்: ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை!!