தமிழகத்தில் திமுக கட்சியில் வெற்றி அலையில் சிக்கி.. மொத்தமாக வாஷ் அவுட்டான பாஜக - அதிமுக! வீடியோ!

தமிழகத்தில் நேற்று 7 கட்டமாக நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் தமிழகம் மற்றும் புதுவை ஆகிய 40 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 

Share this Video

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழகத்தில் இம்முறை பாஜக பல தொகுதிகளில் வெற்றிபெறும் என நம்பிக்கையோடு காத்திருந்தார் அண்ணாமலை. ஆனால் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாமல் போனது. பாஜக கட்சியில் இடம்பெற்றிருந்த பாமக கட்சி தருமபுரி, சேலம், ஆரணி, திண்டுக்கல், அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 தொகுதியிலும் வாஷ் அவுட் ஆனது.

குறிப்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி, திமுக வேட்பாளர் மணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார். அதே போல் கேப்டன் விஜயகாந்தின் மகனும் நீண்ட இழுபறிக்கு பின்னர் திமுக போட்டியாளரிடம் வெற்றியை பறிகொடுத்தார். இதுகுறித்த மொத்த விவரங்கள் அடங்கிய வீடியோ இதோ...

Related Video