பாஜகவிற்கு தில்லு, தைரியம் இருந்தால் இதை செய்து காட்டுங்கள் - கே.பி.முனுசாமி பகிரங்க சவால்

பாஜகவிற்கு தைரியம் இருந்தால் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 2 தமிழர்களை தமிழகத்தில் போட்டியிட செய்து வெற்றி பெற செய்ய முடியுமா என கே.பி.முனுசாமி சவால் விடுத்துள்ளார்.

Share this Video

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி, சூளகிரி ரவுண்டானாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் அதிமுகவின் துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள் ஆட்சியில் உள்ளார்கள். நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். உண்மையிலேயே பாஜகவிற்கு தைரியம், தில்லு இருந்தால் தமிழகத்தில் 2 அமைச்சர்களை எந்த தொகுதியிலாது நிறுத்துங்கள். தமிழக மக்கள் என்ன பாடம் புகட்டுவார்கள் என்பது தெரியவரும் என சவால் விடுத்தார்.

Related Video