கரூரில் திமுக நிர்வாகிகளை தாக்கிய அதிமுகவினர்..! செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு வீடியோ..

கரூரில் திமுகவினர் மீது அதிமுக கட்சியை சார்ந்தவர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடுநிலையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.
 

First Published May 8, 2020, 1:24 PM IST | Last Updated May 8, 2020, 1:24 PM IST

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு கொங்கு நகரில் வசிப்பவர் கண்ணன். திமுக வடக்கு நகர இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.

அவரை கடந்த ஏப்ரல் மாதம் அதிமுகவை சார்ந்த நிர்வாகிகள் தாக்கியுள்ளதாகவும், இது தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவரை திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி இன்று அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து கொரனோ நிவாரண பொருள் வழங்கி விட்டு நலம் விசாரித்து சென்றுள்ளார்.

அவர் சென்ற சில மணி நேரத்தில் அவர்களது வீடுகளுக்குள் புகுந்த அதிமுகவினர் கண்ணன், அவரது மனைவி, குழந்தைகள் உள்ளிட்டோரை தாக்கி விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்களை கட்சி நிர்வாகிகள் மூலம் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் அதிமுகவினர், திமுக நிர்வாகிகளை தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக இருப்பதாகவும், அதற்கு காவல் துறை அதிகாரிகள் தாக்கியவர்களையும் மருத்துவமனையில் அனுமதித்து இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்வதாக குற்றம் சாட்டியதுடன், காவல் துறையினர் நடுநிலையாக இருந்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காளிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.