Karnataka Election Result : பெங்களூருவில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டம்!

 பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களுக்கு அதிகமாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதால் பெங்களூருவில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

Share this Video

கர்நாடகாவில் உள்ள 6 மண்டலங்களில் 5ல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில் இருப்பதை அடுத்து நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஓட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பெங்களூரு வர காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது பெங்களூருவில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

Related Video