பாட்ஷா ரஜினிகாந்த் ஸ்டைலில் ஆட்டோ ஓட்டி அசத்திய எம்.எல்.ஏ. கண்ணன்

அரியலூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் ஆட்டோவை ஓட்டி பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சட்டமன்ற உறுப்பினர் கண்ணன்.

Share this Video

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து கிராம ஊராட்சிகளுக்கு ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் ஆட்டோக்களின் சாவியை வழங்கினார்.

அப்போது கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட ஆட்டோவை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டு, ஆட்டோவை ஓட்டிக்கொண்டு நாலாபுறமும் வலம் வந்தார். இந்த காட்சிகளை ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து கைத்தட்டி ரசித்தனர்.

Related Video