"ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம்" - அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்

ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் ஏன அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது பரபரப்பை ஏர்படுத்தி உள்ளது.

First Published Jul 20, 2023, 10:02 PM IST | Last Updated Jul 20, 2023, 10:23 PM IST

தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் திண்டுக்கல் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசுகையில், தொடர்ந்து இரண்டு முறை பிரதமராக இருந்து வரும் நரேந்திர மோடியை உலகத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தியா தலைமை தாங்குகின்ற நாடாக உள்ளது. அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்ய அதிபர் புட்டின் ஆகியோர் மோடியை உலகத்தலைவராக  ஏற்றுக் கொண்டுள்ளனர். மோடி அவர்களுக்கு பஞ்சாயத்து செய்து வருகிறார் என பேசினார்.

தொடர்ந்து திமுக அரசின் குறைபாடுகளை பட்டியலிட்டுக்கொண்டு வருகையில் ஒரு கட்டத்தில் ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று அனைவரது மத்தியிலும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அருகில் இருந்த ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக ஸ்டாலினின் பெயரை கூறிவிட்டீர்கள் என்று கூறியதைத் தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட திண்டுக்கல் சீனிவாசன் பதறிப்போய் மறுப்பு தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை நிலவியது.

Video Top Stories