Watch : சிறப்பான தரிசனம்.. அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும் - பிரேமலதா விஜயகாந்த் சொன்ன குட்டி ஸ்டோரி

சக்கரத்தாறை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளேன். சக்கரம் சுழன்று கொண்டு தான் உள்ளது அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும் என்று கூறியுள்ளார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.

First Published Mar 19, 2023, 2:57 PM IST | Last Updated Mar 19, 2023, 2:57 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்னா வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “உள்ளாட்சி மற்றும் ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விட தேமுதிகவின் வாக்கு விகிதம் மிகவும் சரிந்து உள்ளது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, சக்கரத்தாறை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளேன். சக்கரம் சுழன்று கொண்டு தான் உள்ளது அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும் என்று கூறினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துள்ளது. பெண்கள் கூட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். தெருவுக்கு நான்கு ஒயின்ஷாப்புகள் என 24 மணி நேரங்களும் மது கிடைப்பதால் சட்டம் ஒழுங்கு பெரிதளவில் பாதிப்புகளுக்கு சீர்குலைந்து போகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக ஆக போகிறார் என்று மூத்த அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் பேசுகிறார்கள் என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

தனது குடும்பத்திலிருந்து எந்த வாரிசுகளும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் தற்போது தனது மகனான உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக அமர வைக்க ஆசைப்படுகிறார்  இதற்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்

இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்

Video Top Stories