நடிகர் சத்யராஜ் மகள் அரசியலில் என்ட்ரி!திமுகவில் இணைந்த திவ்யா சத்யராஜ்!|Asianet News Tamil
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் சேர்ந்தார். நடிகர் சத்யராஜ் திராவிட கொள்கை மற்றும் பெரியார் கொள்கைகளை பேசி வருகிறார். அவர் திமுகவின் ஆதரவாளர் என கூறப்படும் நிலையில் அவரது மகள் திவ்யா சத்யராஜ் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.