நடை பயணத்தில் அண்ணாமலையை கட்டியணைத்த தொண்டரை கும்மியெடுத்த பொதுச் செயலாளர்; பதறிப்போன அண்ணாமலை

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயண கூட்டத்தில் புகுந்த இளைஞர் ஒருவர் அண்ணாமலை இறுக கட்டி பிடித்ததால் பதற்றம் அடைந்த அண்ணாமலை அந்த இளைஞரை பிடித்து தள்ளியதால் பதற்றமான சூழல் உருவானது.

Share this Video

தஞ்சை கொடிமரத்து மூலையில் இருந்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணத்தை தொடங்கினார். வடக்கு வீதி சாலை வழியாக அண்ணாமலை தொண்டர்கள் புடைசூழ நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் புகுந்த இளைஞர் ஒருவர் திடிரென அண்ணாமலை கையை பற்றியவாறு இறுக கட்டி அணைத்தார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அண்ணாமலை அந்த இளைஞரை பிடித்து தள்ளினார். அப்போது உடன் இருந்த மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் அந்த இளைஞரை தாக்கினார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆசுவாசப்படுத்திக் கொண்ட அண்ணாமலை அந்த இளைஞரை மீண்டும் அழைத்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Related Video