விளவங்கோடு தொகுதியை காலியானதாக அறிவித்த சபாநாயகர், பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியை அறிவிக்காதது ஏன்? பாஜக
விஜயதாரணியின் விளவங்கோடு தொகுதியை காலியானதாக அறிவித்த சபாநாயகர் அப்பாவு, பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியை அறிவிக்காதது ஏன் என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
நாமக்கல், திருச்செங்கோடு சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் கே.பி ராமலிங்கம், வி.பி துரைசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சி நாமக்கல் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இதையடு்த்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி, சபாநாயகர் அப்பாவு நீதிபதியாக செயல்பட வேண்டும். நடுநிலையாக செயல்பட வேண்டும். விளவங்கோடு தொகுதியை காலி இடமாக அறிவித்த சபாநாயகர் 60 நாட்கள் ஆகியும் திருக்கோவிலூர் தொகுதியை அறிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவர் தலைவர் சரவணன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.