Asianet News TamilAsianet News Tamil

மும்பையில் இருந்து பிழைப்பு தேடி வந்த குஷ்பு எங்கள் மக்களை கொச்சைபடுத்துவதா? வீரலட்சுமி ஆவேசம்

மும்பையில் இருந்து நடிப்பு பிழைப்புக்காக வந்த நடிகை குஷ்பு சேரி மொழி என்று கொச்சைப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என வீரலட்சுமி எச்சரித்துள்ளார்.

First Published Nov 28, 2023, 3:48 PM IST | Last Updated Nov 28, 2023, 3:48 PM IST

பாஜக மகளிர் அணி நிர்வாகியும், திரைப்பட நடிகையுமான குஷ்பு  வீட்டு அருகில் வசிக்கும் மக்களை சேரி மக்கள் என்றும், சேரி மொழி என்றும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்றப் படை தலைவர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி ஜான்சாமுவேல் உள்ளிட்ட பலர்  திருவள்ளூர் எஸ்பி பா.சிபாஸ் கல்யாணிடம் புகார் மனு அளித்தனர். 

தமிழ்மக்களை இழிவாகப் பேசிய குஷ்பு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் வீரலட்சுமி எச்சரித்தார். மேலும் மும்பையிலிருந்து நடிக்க பிழைப்பு தேடி தமிழகத்திற்கு வந்துவிட்டு, தமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்ளலாம் என்று பேசியது, விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று பேசியதற்கும்  கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனவே இனி நாவடக்கத்துடன் குஷ்பு பேச வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார்.

Video Top Stories