Asianet News TamilAsianet News Tamil

அதிகரிக்கும் ஆவின் பொருட்களின் விலை.. வாபஸ் பெற வேண்டும்! - எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பேட்டி

ஆவின் பொருட்களின் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். தமிழக அரசு தனியார்த்துறை வேலைவாய்ப்பில் 75 சதவீத வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் நலிந்து வரும் தொழில்களை மீட்டெடுக்க கொங்கு மண்டல மாநாட்டை முன்னெடுக்க உள்ளோம்.

ஆவின் பொருட்களின் உயர்ந்திருக்கும்  விலை உயர்வை வாபஸ் பெறப் பட  வேண்டும். பரந்தூர் மக்களோடு இணைந்து போராட்டக்களத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி துணைநிற்கும் பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் இயற்கை சீற்றங்களால் சென்னையும் பாதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டத்திற்கு வெகு விரைவில்  ஆளுநர் கையெழுத்திட வேண்டும். ஆளுநர்  இல்லா தமிழகம் உருவாக மாநில அரசு துணை செய்ய வேண்டும்.

ஆளுநர் தமிழக மக்களை பிளவு படுத்தும் செய்திகளை பரப்பி வருகிறார். ஒன்றரை வருடத்தில் 78பேர் தற்கொலைக்கு ஆளாகியிருக்கிறார். அப்படிப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். என்.ஐ.ஏ வின் செயல்பாடுகளுக்கு தமிழக அரசு விரைவாக கடிவாளமிடவேண்டும். ஒன்றிய அரசு மதத்தையும், இந்துத்துவத்தையும் வைத்து மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

இதையும் படிங்க..அண்ணாமலை கட்டிய ரபேல் வாட்ச்.. ரபேல் விமான பாகத்தில் செய்யலையா.? உண்மை இதுதான் மக்களே !

இதையும் படிங்க..அப்போ இருந்த இலங்கை போராட்ட களமா இது.? அனைவரையும் ஆச்சரியப்படுத்திய வைரல் புகைப்படம் !!

Video Top Stories