கைது செய்யப்படுகிறாரா சீமான்.? நடிகை விஜய லட்சுமிக்கு ‘பயம்’ காட்டும் நாம் தமிழர் கட்சி - குவியும் புகார்

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முன்னாள் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் சுமதி அன்பழகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் புகார் மனு ஒன்று அளித்தார். 

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் நட்பு இருக்கு கலங்க விளைவிக்கும் வகையிலும் அரசியல் வளர்ச்சியை தடுக்கும் போக்கிலும், முன்னாள் நடிகை விஜயலட்சுமி அரசியல் உள்நோக்கத்துடன் பிற கட்சிகளுடன் தூண்டுதலின் பேரில் அப்பட்டமான எவ்வித எழுத்துப்பூர்வ அதிகாரமும் இன்றி ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.

மேலும் தேர்தல் நேரத்தில் மட்டும் விஜயலட்சுமி பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். விஜயலட்சுமி வைத்து வரும் குற்றச்சாட்டுகளை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் மேலும் பொய்யான தகவல்களை பரப்பி வரும் விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

குட் நியூஸ்.. எஃப்டிக்கு 8%க்கும் அதிகமாக வட்டியை உயர்த்திய 3 வங்கிகள்.. என்னென்ன தெரியுமா.?

Related Video